தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 145 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலை - டிசம்பரில் கும்பாபிஷேகம்? - salem district news

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக பிரமாண்டமான 145 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலம் அருகே மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

சேலத்தில் 145 அடி உயர முருகன் சிலை
சேலத்தில் 145 அடி உயர முருகன் சிலை

By

Published : Sep 22, 2021, 6:59 AM IST

சேலம் :மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை பகுதியில் 140 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலையுடன் கூடிய முருகன் கோவில் உள்ளது. மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலில் தவறாமல் தரிசனம் செய்வார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும்.

இந்த சிலையை விட பிரம்மாண்டமாக, சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் 145 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டுவருகிறது. மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இச்சிலையை வடிவமைத்து வருகிறார்கள்.

சேலத்தில் 145 அடி உயர முருகன் சிலை

இந்த முருகன் சிலையை அமைத்து வரும் முருக பக்தர் ஸ்ரீதர் கூறுகையில்," கடந்த 2016ஆம் ஆண்டு பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த சிலை அமைக்கும் பணி 70 விழுக்காடு முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஈபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details