இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 மத போதகர்கள் மற்றும் சென்னை பயண வழிகாட்டி ஒருவர், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தமாக 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இதனிடையே, இவர்கள் மீது சேலம் டவுன் ஸ்டேஷனில் மத பரப்புரை செய்தது, கரோனா வைரஸ் தொற்றைப் பரப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்த 16 பேரும் குணமடைந்தனர். அதையடுத்து, அவர்கள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று காலை 5 மணியளவில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் உள்பட 16 பேர் புழல் சிறையில் அடைப்பு இந்த வழக்குகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த 16 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''புழல் சிறையில் அடைக்கப்படும் இந்த 16 பேரும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கப்படும். அவர்கள் மூலமாக கரோனா வைரஸ் தொற்று பரவியதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல்படும் ஹெச். ராஜாவை கைது செய்க' - திருமுருகன் காந்தி