சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் இன்று (நவ.06) 108 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் 108 பேருக்கு கரோனா! - சேலம் கரோனா பாதிப்பு
சேலம் : இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “சேலம் மாநகராட்சியில் 40 பேரும், எடப்பாடி 3, வீரபாண்டி 7, ஓமலூர் 1, சங்ககிரி 4, மேட்டூர் நகராட்சி 1, மேச்சேரி 3, நங்கவள்ளி 3, தாரமங்கலம் 4, மகுடஞ்சாவடி 3, வாழப்பாடி 4, கெங்கவல்லி 1, பெத்தநாயக்கன்பாளையம் 4, பேளூர் 1, அயோத்தியாப்பட்டணம் 2 என மாவட்டத்தைச் சேர்ந்த 84 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில், கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 424 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 27,967 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 26 ஆயிரத்து 339 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஆயிரத்து 204 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.