சேலம் மாவட்டம், ஓமலூர் தாரமங்கலம் சாலையில் பறக்கும்படை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி டெம்போவில் அவர்கள் சோதனை செய்தனர். ஒரு ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 41 புடவைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
ஓமலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 1000 புடவைகள் மீண்டும் ஒப்படைப்பு! - caught
சேலம்: ஓமலூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 41 புடவைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், புடவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள்
இதைத்தொடர்ந்து புடவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓமலுர் வட்டாட்சியர் குமரனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனால் சிறிது நேரத்தில் ஜவுளி நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்து வரப்பட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை மீண்டும் ஒப்படைத்தனர்.