தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல் கட்டமாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாவரி கிராமத்தில் 100 வயதான சின்ன பிள்ளை என்ற மூதாட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வாக்குச்சாவடிக்கு வந்து கடமை தவறாமல் வாக்களித்தார்.
100 வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி வாக்களித்தது குறித்து சின்னபிள்ளை மூதாட்டி கூறுகையில், நான் உயிரோடு இருக்கும் வரை என் ஜனநாயக கடமையாற்றுவேன் என்றும், திருமணமான நாள் முதல் இதுவரை ஒரு தேர்தலிலும் கூட நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்த மூதாட்டியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்!