தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: போலீஸார் விசாரணை - youth murder

அரக்கோணம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ranipet news  ranipet latest news  Youth murder due to prejudice in ranipet  ranipet youth murder  ராணிபேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை  கொலை சம்பவம்  ராணிப்பேட்டை கொலை சம்பவம்  ராணிபேட்டை அரக்கோணம் கொலை சம்பவம்  குற்றச் செய்திகள்  crime news  youth murder  murder case
முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை

By

Published : Jun 26, 2021, 1:58 PM IST

ராணிப்பேட்டை:அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன் (31), சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

இளைஞர் வெட்டிக் கொலை

இந்நிலையில் நேற்று (ஜூன். 25) மாலை வடமாம்பாக்கம் கிராமத்திலுள்ள தன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இளைஞர் கோதண்டன் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அரக்கோணம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கோதண்டனின் உடலைக் கைப்பற்றி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமா?

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து கொலையான கோதண்டன் கடந்த 2014ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பதால், இக்கொலை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் நகரம், பள்ளூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு கொலைகள் நடந்த நிலையில், இது மூன்றாவது கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை

ABOUT THE AUTHOR

...view details