ராணிப்பேட்டை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது கணவரை பிரிந்து 17 மகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் குடியேறினார். தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து அந்தப் பெண்ணின் மகள் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், பாஸ்கரன் என்கிற பகுடு பாஸ்கரன் (35). கஞ்சா வியாபாரியான இவர் மீது கொள்ளை, மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பியுள்ளார்.
இவருக்கு மேலே குறிப்பிட்ட பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கவனித்த பாஸ்கரனின் மனைவி துர்கா (28), அப்பெண்ணிடம் நேரில் சென்று ‘ஏய் நீ அழகா இருக்கேன்னு என் கணவர் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காரு, இதனால் எங்களுக்கு சண்டை வருகிறது. நீ இங்கிருந்து வேறு ஊருக்கு சென்று விடு’ என மிரட்டியுள்ளார். அதற்கு செல்வி, ‘நான் ஏன் இங்கிருந்து செல்ல வேண்டும்’ என்று பதிலுக்கு கேட்ட நிலையில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த பாஸ்கரனை, இரவு நேரத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற துர்கா, வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது, அந்தப் பெண் கதவைத் திறந்துள்ளார். பின்னர் உடனே கணவர் பாஸ்கரனை வீட்டினுள்ளே அனுப்பிவிட்டு வெளிப்பக்கமாக துர்கா தாழ்ப்பாள் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணின் வீட்டிற்க்குள் சென்றதும் கஞ்சா போதையில் இருந்த பாஸ்கரன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு, அப்பெண்ணின் 17 வயது மகளையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த கொடூரத்தை தனது செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் பதிவு செய்துள்ளார்.
அதை வைத்துக்கொண்டு பாஸ்கரன் அடிக்கடி அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் பொறுமையை இழந்த அப்பெண், இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர், பாஸ்கரனையும், அவருக்கு பிளான் போட்டுக்கொடுத்த அவரது மனைவி துர்காவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க:போலீஸை கன்னத்தில் பளார்விட்ட போதைப்பெண்... ஆண் நண்பருடன் கைது