ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தின் விஏஓ ஆக பணியாற்றி வருபவர் இலியாஸ் (38 ). இவர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பட்டா மாறுதல் செய்யும் போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் இலியாஸிடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய போது அந்த பட்டாவை மாறுதல் செய்து கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரிடம் பட்டாவை மாறுதல் செய்து தரக்கூடாது என்று வருவாய் கோட்டாட்சியர் கூறியதாகக் கூறப்படுகிறது.