ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞர் அனுராதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதேபோல மேல்வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரண்டு காதல் ஜோடிகளும் ஒரே நேரத்தில் பாதுகாப்புக்கேட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள்; என்ன நடந்தது ராணிப்பேட்டையில்..? - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் இருவேறு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள்
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் குடும்பத்தினரை நேரில் அழைத்து காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததோடு, காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வனத்துறை சாதுரியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய மக்னா யானை… பதைபதைக்க வைக்கும் வீடியோ
Last Updated : Feb 28, 2023, 10:43 PM IST