ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில்13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான நபர், காய்கறி அங்காடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
அதேபோல், அதே பகுதியில் 55 வயதான நபர் ஒருவர் பங்க் கடை நடத்தி வந்து உள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து இருவரும் பல முறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியின் நடவடிக்கைகளில் சில மாற்றம் தெரிவதை பெற்றோர் கவனித்து உள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக அவரது பெற்றொர் சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இருவரால், தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதை சிறுமி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:கோழிக் குழம்பில் மயக்க மருந்து கொடுத்து 100 சவரன் அபேஸ்.. பலே கும்பல் சிக்கியது எப்படி?