தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாத் தலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் ஆய்வு - tourism minister mathiventhan

சுற்றுலாத் தலங்களில் பலகைகள், பதாகைகள் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனச் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

tn state tourism minister mathiventhan planning corona awareness in tourism places
tn state tourism minister mathiventhan planning corona awareness in tourism places

By

Published : Oct 18, 2021, 9:57 AM IST

ராணிப்பேட்டை:பாரதி நகரில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு கட்டடத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிவேந்தன் நேரில் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளரைச் சந்தித்த அவர், இணையதள வழி தனியார் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்வது போன்ற வசதிகளை அரசு தங்கும் விடுதிகளிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறினார்.

அதேபோல் இணைய வழியில் உணவு ஆர்டர் செய்வது போலவே, ஹோட்டல் தமிழ்நாட்டிலும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலாத் தலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறிப்பு அமைச்சர் ஆய்வு

தொடர்ந்து பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க, சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் பலகைகள், பதாகைகள் ஆகியவை மூலம், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மதிவேந்தன் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:வெள்ளப்பெருக்கில் சிக்கியவரைப் போராடி காப்பாற்றிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details