ராணிப்பேட்டை:ராணிப்பேட்டையைச் சேர்ந்த 24, 31 மற்றும் 43 வயதான நபர்கள் நண்பர்களாக இருந்து உள்ளனர். இவர்களில் 24 வயதான இளைஞர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மாலை அங்கு உள்ள கடைக்கு பேனா வாங்குவதற்காக மாணவி சென்றுள்ளார்.
அப்போது மாணவியிடம், அருகில் காதணி விழா ஒன்று நடப்பதாகவும், அங்கு சென்று வரலாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அந்த இளைஞர் மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரில் அவரது நண்பர்கள் இருவருமே இருந்து உள்ளனர்.
இதனையடுத்து காரில் செல்லும்போது இளைஞர், மாணவியின் தோள் மீது கை போட்டு உள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தபோது கன்னத்தில் அறைந்ததாகவும், மேலும் அவர்கள் மாணவியின் மடியில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் மாணவியை ஒரு பகுதியில் இறக்கிவிட்டு அனைவரும் காரில் சென்று விட்டனர்.