தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Ranipet Car Accident: ராணிப்பேட்டை அருகே கோர விபத்து.. 3 பேர் பலி; 3 குழந்தைகள் படுகாயம்! - ராணிப்பேட்டை கார் விபத்து

வாலாஜாபேட்டை அருகே உள்ள குடிமல்லூர் மேம்பாலத்தின் பக்கத்தில் கிரீஸ் அடிக்க நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident near valajapet - 3 dead
வாலாஜாபேட்டை அருகே லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

By

Published : May 31, 2023, 5:19 PM IST

ராணிப்பேட்டை:சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமால். வேலூரில் உறவினர் வீட்டில் நடைபெற்ற காரிய நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பு உள்ளார். கார் வாலாஜாப்பேட்டை பகுதியை அடுத்த குடிமல்லூர் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர், நெடுஞ்சாலை ஓரத்தில் கிரீஸ் அடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருமால், அவரது சகோதரி எழிலரசி மற்றும் ஓட்டுநர் அஜய் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரிலிருந்த ஒரு சிறுவன் மற்றும் இரு சிறுமிகள் உடலில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சந்திப்பு... என்னாவா இருக்கும்!

ABOUT THE AUTHOR

...view details