தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பராமரிப்பு பணி காரணமாக இன்டர்சிட்டி ரயில் சேவை பாதிப்பு - katpadi

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.24) இண்டர்சிட்டி ரயில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று இன்டர்சிட்டி ரயில் சேவை பாதிப்பு!
இன்று இன்டர்சிட்டி ரயில் சேவை பாதிப்பு!

By

Published : Jan 24, 2023, 8:52 AM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட வாலாஜா தண்டவாளப் பகுதியில் இன்று (ஜன.24) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக 2 மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டும், 4 விரைவு ரயில்களில் சேவை மாற்றம் செய்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வேலூர் கண்டோன்மென்ட் முதல் அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டும் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில், காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மேலும் மைசூர் - சென்னை சென்டரல் செல்லும் 12610 எண் கொண்ட அதிவிரைவு ரயில், காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்டரலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் இன்டர் சிட்டி அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் மாலை 4.20 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு இயக்கப்படும். மேலும், மதியம் 3 மணிக்கு சென்ட்ரல் - பெங்களூரு செல்லும் லால்பாக் அதிவிரைவு ரயில், சென்ட்ரல் காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக இந்த ரயில் மாலை 5.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்படும்.

இதையும் படிங்க:செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே

ABOUT THE AUTHOR

...view details