தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திராவுக்கு எடுத்து செல்ல முயன்ற லாரி பறிமுதல் - ராணிப்பேட்டை வருவாய்த்துறையினர் அதிரடி

ராணிப்பேட்டை: சிப்காட் பகுதியில் மருந்து தயாரிக்கும் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திராவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

lorry
lorry

By

Published : Dec 19, 2020, 6:55 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருந்துகள் தயாரிக்கும் மல்லாடி டிரக்ஸ் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இருந்து முறையாக சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு நீரை முறைகேடாக லாரி மூலம் ஏற்றி செல்லப்படுவதாக சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் திருவலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பறிமுதல்

அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு நீர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், சிப்காட் காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்ததோடு லாரியில் இருந்த கழிவுநீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:'தொற்று குறைந்ததால் தான் அரசியல் பரப்புரைக்கு அனுமதி' - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details