ராணிப்பேட்டை: அரக்கோணம் பூக்கார பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி என்கிற கார்த்திகேயன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த கோகுல் என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கரோனா பரவல் காரணமாக, ஜுன் 4ஆம் தேதி கார்த்தி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜுன் 6ஆம் தேதி பிற்பகல் போலாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மொட்டை மாடியில் அமர்ந்து கார்த்தியும் அவரது நண்பரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கார்த்தியை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
கொலை நடந்த இடத்தில் காவல் துறையினர் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கார்த்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கோகுலின் உறவினர்கள், இந்த கொலையை செய்திருக்கலாம் எனத் தகவல் தெரிவித்துள்ளனர். கார்த்தி என்கிற கார்த்திகேயன் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கசந்த பிறந்தநாள் பார்ட்டி- ஆண் நண்பருடன் சண்டை- லிப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!