தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோக நரசிம்மர் கோயில் ரோப்கார் பணிகள் நிறைவு - ropecar works finished

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே யோக நரசிம்மர் கோயிலில் ரோப்கார் வசதிக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், கேபிளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது.

பல ஆண்டுகளக தாமதமான ரோப்கார்
பல ஆண்டுகளக தாமதமான ரோப்கார்

By

Published : Jun 28, 2021, 3:37 PM IST

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே யோக நரசிம்மர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு படிகள் வழியாக மட்டுமே செல்ல முடியும். 1,305 படிகள் கொண்ட மலை கோயில் என்பதால், மலை ஏற இயலாத பக்தர்களை டோலி மூலம் தொழிலாளர்கள் சுமந்து சென்று வந்தனர். இதனையடுத்து ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டில் ரூ. 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் 11ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேலும் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

கோயிலில் ரோப்கார்

இந்நிலையில், ஜூன் 26 ஆம் தேதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உதவி ஆனையர் ஜெயா முன்னிலையில் கேபிளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரோப்கார் சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details