ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி(60). இவருக்கு பெங்களுரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சொந்தமான வீடு உள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, வீட்டை இடித்து அதில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதற்காக, வீட்டின் உரிமையாளர் தஷ்ணாமூர்த்தி வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து தஷ்ணாமூர்த்தியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.