தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை: போலீஸ் விசாரணை! - ரயில்வே ஊழியர் கொலை

ராணிப்பேட்டை: சோளிங்கரை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Retired railway employee killed: Police probe
Retired railway employee killed: Police probe

By

Published : May 8, 2021, 4:11 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வரதராஜன் (67). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று (மே. 06) இரவு தூங்கச் சென்றுள்ளார்.

காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் வயலின் அருகே சென்று பார்த்தபோது, படுகாயங்களுடன் வயல்வெளியில் இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், வரதராஜன் முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி, அவரை வயல்வெளியில் ஓட ஓட கத்தியால் குத்தியும், அடித்தும், கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details