ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கம்மவார் தெருவைச் சேர்ந்தவர், கோகுல். இவரை நான்கு பேர் அடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
ராணிப்பேட்டையில் இளைஞரைக் கொலை செய்தவர்களின் சிசிடிவி காட்சி சிக்கியது! - ranipet murder cctv
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டிக் படுகொலை செய்த கும்பலின் சிசிடிவி காட்சி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
cctv-footage-of-a-murderers
இதில் தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோகுலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த அக்கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணையை காவல் துறையினர் துரிதப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:தொழில் விரோதத்தால் ஒருவர் கொலை: 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்!