தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு! - ranipettai new Kāval kaṇkāṇippāḷar 21 / 5000 Translation results Superintendent of Police

ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சிவக்குமார் பொறுப்பேற்றார்.

Ranipettai new Superintendent of Police Sivakumar
Ranipettai new Superintendent of Police Sivakumar

By

Published : Feb 19, 2021, 9:21 AM IST

வேலூரிலிருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டமாக 2019ஆம் ஆண்டு உதயமானது. மாவட்டம் பிரிக்கப்பட்ட நாள் முதல் நேற்று (பிப். 17) வரை ஓராண்டுக்கும் மேலாக மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மயில்வாகணன்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி நேற்று 54 காவல்துறை தலைமை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார்
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிவக்குமார் நேற்று (பிப். 18) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், சேலம் மண்டல அமலாக்கத்துறையின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார்.

இவர் கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டதை அடுத்து பல்வேறு கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து இவர் எழுதிய கவிதை பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாதனையின் வயது 88 - கிராம தலைவரான மூதாட்டி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details