ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதிகளை இணைக்கக்கூடிய பாலாற்றின் மேம்பாலத்தின் மீது சாத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ரமேஷ்(37), பரிமளா(27) மற்றும் இவர்களது மகளான ஓவியா(7) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருந்த குடும்பத்தினரான ரமேஷ், பரிமளா, ஓவியா ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் காயமடைந்த ரமேஷ் பரிமளா குழந்தை ஓவியா உள்ளிட்ட மூன்று நபர்களையும் பத்திரமாக மீட்டார். தொடர்ந்து, தனது காரில் இம்மூன்று பேரையும் ஏற்றிக்கொண்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.