தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2020, 12:24 AM IST

ETV Bharat / state

'133 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்'- ஆட்சியர் திவ்யதர்ஷனி!

ராணிப்பேட்டை: கரோனா வைரஸ் தொற்று உள்ள நபர் சம்மந்தப்பட்ட ஆள்களையும், பகுதியையும் தனிமைப்படுத்தியுள்ளோம். தற்போது வரை 133 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என ஆட்சியர் திவ்யதர்ஷனி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் திவ்யதர்ஷனி
ஆட்சியர் திவ்யதர்ஷனி

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உடனான ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷனி அளித்த பேட்டியில் கூறியதாவது,

“ராணிப்பேட்டை மாவட்டத்தில் 26 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா COVID19 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கண்டறிந்து தனிமப்படுத்தியுள்ளோம். மேலும் அப்பகுதியில் உள்ள 10 வீடுகளில் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.

10 வீடுகள் அடங்கிய அனைத்து தெருக்களையும் மூடி தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு போய் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் என கூறி அப்பகுதி பஞ்சாயத்து ஆள்கள் உதவியோடு கண்காணித்து வருகிறோம்.

10 தெருக்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் அறிவுறுத்தி வருகிறோம்.

மருத்துவர்களையும் பரிசோதித்து வருகிறோம். தற்போது கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கடவுள் ஆசீர்வாதத்தில் எதுவும் நடக்காது. தேவைபட்டால் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்போம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வரை 133 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இது தவிர விமான நிலையத்தில் இருந்து 77 பேர் அடங்கிய பட்டியல் வந்துள்ளது.

அவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வருகிறோம். அவர்களது கைகளிலிலும், வீடுகளிலும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா அச்சம்: வட்டத்திற்குள் வரும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details