தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணிப்பேட்டையில் 20 ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் புயலால் நாசம்! - வாழைமரங்கள் சேதம்

ராணிப்பேட்டை: நிவர் புயல் காரணமாக 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டப்பட்டிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

banana
banana

By

Published : Nov 26, 2020, 5:13 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த மோசூர் கிராமப்பகுதியில் வாழை விவசாயத்தை அப்பகுதி மக்கள் பிரதனமாக செய்துவருகின்றனர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நேற்று காலை முதலே அப்பகுதியில் பலத்து காற்று வீசியதுடன் தொடர் கனமழையும் பெய்தது.

இதன் காரணமாக அங்கு 20 ஏக்கர் பரப்பளவில் நடவுசெய்த 30 ஆயிரத்திற்ககும் மேற்பட்ட வாழை மரங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சரிந்து விழுந்தது. அறுவடைக்குத் தயாரான வாழை மரங்கள் சேதமடைந்தது அப்பகுதி விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details