ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் வந்த மினி வேனை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்ட காவலர்கள், வேனில் நியாய விலைக்கடை அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
ராணிப்பேட்டையில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது - நியாய விலைக்கடை அரிசி கடத்தல்
ராணிப்பேட்டை: குடியாத்தத்திற்கு கடத்த முயன்ற ஏழு டன் நியாய விலைக்கடை அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, அதைக் கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வேன் ஓட்டுநர் கார்த்தி, நவீன் ஆகியோரை விசாரித்ததில் வாலாஜாபேட்டை அடுத்த வீ.சீ. மோட்டூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மர குடோனில் நியாய விலைக்கடையின் அரிசி பதுக்கி வைத்து அங்கிருந்து குடியாத்தத்திற்கு கடத்துவதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
காவல் துறையினர் அளித்த தகவல் அடிப்படையில் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பாக்கியநாதன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மேலும் கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த 160 அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. மினி வேனில் இருந்த அரிசி உள்பட குடோனில் இருந்த அரிசியும் சேர்த்து மொத்த எடை சுமார் ஏழு டன் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 13 சவரன் நகை திருட்டு!