தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையின் புகாரால் மகனின் உடலைத் தோண்டி எடுத்து காவல் துறையினர் விசாரணை! - ராணிப்பேட்டை அண்மைச் செய்திகள்

மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சடலத்தை தோண்டியெடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டையில் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை!
ராணிப்பேட்டையில் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை!

By

Published : Oct 31, 2021, 7:39 AM IST

ராணிப்பேட்டை: அரக்கோணத்தை அடுத்த அவினாசி கண்டிகையைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவரது மகன் அருண் (32). அக்டோபர் 22ஆம் தேதி அருண் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அருண் குறித்த தகவல் கிடைக்கவில்லை. அதற்கு மறுதினம் அருண் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். பலமுறை எழுப்பியும் அருண் அசைவின்றி கிடந்துள்ளார்.

உடல் தோண்டி எடுப்பு

தொடர்ந்து, அவர் மது போதையில் இறந்து விட்டதாகக் கருதி, அக்டோபர் 23ஆம் தேதி மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அருணின் நண்பர்கள், மது போதையில் ஏற்பட்ட தகராறில் அருண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கோவிந்தராஜ் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அரக்கோணம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவனாசி கண்டிகை இடுகாட்டில் புதைக்கப்பட்ட அருணின் உடலை உயர் அலுவலர்கள் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

பின்னர் அருணின் உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி இரட்டைக் கொலை - தீவிர சோதனை

ABOUT THE AUTHOR

...view details