ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கைத்தறி பட்டு நெசவாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைத்தறி பட்டு நெசவு என தெரிவித்து சிலர் மின்னணு நெசவு இயந்திரங்கள் மூலமாக சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டு நெசவு துணிகளை நெய்து வியாபாரிகளிடம் குறைந்த விலையில் பட்டாடைகளை விற்பனை செய்து வருவதாகவும் அதனைப் பெற்று செல்லும் வியாபாரிகள் கைத்தறி நெசவு பட்டு துணிகள் என பொதுமக்களிடம் விற்பனை செய்துவருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக பாரம்பரிய கைத்தறி நெசவு பட்டுத் துணிகளின் தரம் குறைவதோடு அதன் உற்பத்தி செய்கின்ற கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருவதாக கைத்தறி நெசவு தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.