தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலாற்றில் கலக்கும் கழிவு நீர் - பொதுமக்கள் போராட்டம் - பொதுமக்கள் போராட்டம்

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பாலாற்றில் கலப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

By

Published : Dec 14, 2020, 10:13 PM IST

ராணிப்பேட்டை :ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்த சிப்காட் பகுதியில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல், பாலாற்றில் கலப்பதாகவும், இதனால் ஆறு மாசு அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிப்பு, தொடர் சோதனை உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை எனக் கூறி புளியங்கண்ணு, வா.ஊ.சி நகர், வானம்பாடி, காரை முகுந்தராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று (டிசம்பர் 14) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு நேரங்களிலும், மழை காலங்களிலும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பின்பு இது தொடர்பான புகார் மனுவை அம்மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜிடம் அளித்தனர்.

இதையும் படிங்க:ஓச்சேரி பாலாற்றிலிருந்து நீர் திறந்துவிடக் கோரி சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details