ராணிப்பேட்டை: தாராபுரம் அருகே இடையன்தாங்கள் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால், இறந்தவரை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுவருகின்றனர் இப்பகுதியினர். இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முந்தினம் (நவம்பர் 16) அப்பகுதியில் முனியம்மாள் (75) என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் இடுகாட்டிற்குச் சடலத்தை எடுத்துச் செல்ல வழியில்லாமல் உறவினர்கள், கிராம மக்கள் தவித்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலாஜா பணப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.