ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). இவர், கடந்த 2019ஆம் ஆண்டு ராணுவத்தில் தேர்வாகி பணிக்குச் சென்றுள்ளார். தற்போது இவர் பூனேவில் உள்ள வான்வழி பாதுகாப்பு பிரிவில் கமாண்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தங்கும் முகாமில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவ்வாறு வெளியே சென்றவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, வான்வழி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சதீஷ்குமாரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போன வீரரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.