ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சியில் வசித்து வருபவர் பிரியா. இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு பிரியா, திருப்பாற்கடல் ஊராட்சியில் கணினி உதவியாளராக உள்ள தனக்கு ரூ.36,000 சம்பளம் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் 6 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்றுள்ளார்.
போலி சம்பள சான்றிதழ் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் - Ranipet District
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணிணி உதவியாளர் என போலி சம்பள சான்றிதழ் தயாரித்து 6 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றூம் அவரது கணவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
![போலி சம்பள சான்றிதழ் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் Etv Bharatபோலிசான்றிதழ் மூலம் கடன் பெற்ற ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17443308-thumbnail-3x2-a.jpg)
Etv Bharatபோலிசான்றிதழ் மூலம் கடன் பெற்ற ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு
தற்போது வரை இந்த கடனை திரும்பி செலுத்தாத நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பிரியா மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பிரியா மற்றும் அவரது கணவர் தனஞ்செழியன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'இது புத்தகமல்ல, விழிப்புணர்வு இயக்கம்' ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து