மீட்பு பணியின் போது கரோனா தொற்றால் பாதிப்படையும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரூ. 37.67 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நிரந்தரமாக தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று (நவம்பர் 4) தொடக்கி வைத்தார்.
என்டிஆர்எஃப் வீரர்களுக்கு கரோனா தனிமைப்படுத்தும் மையம்: மத்திய அமைச்சர் தொடக்கி வைப்பு - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் என்டிஆர்எஃப் வீரர்களுக்கு கரோனா தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
இ.சி.ஜி கருவி (ECG Monitor), டீஃபிப்ரிலேட்டர் (Defibrillator), பல்ஸ் ஆக்ஸி மீட்டர் (Pulse Oximeter) மற்றும் ஆக்சிஜன் சப்ளை சிலிண்டர் (Oxygen Supply Cylinder) போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR- Structural Engineering Research Centre) இணைந்து வடிவமைத்துள்ளன.
பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க இது உதவும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குநர் எஸ்.என். பிரதான், சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநர் ஷேக்கர் மண்டே ஆகியோர் உடனிருந்தனர்.