தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்! - latest news in ranipet

Arakkonam news: அரக்கோணம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 95 வயது மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

old-woman-injured-surrounding-wall-of-the-house-collapsed-n
வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:09 AM IST

ராணிப்பேட்டை:மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அரக்கோணம் பகுதியில் 100 மில்லிமீட்டர் அளவு மழைப் பதிவானது.

இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. மேலும் சிலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக சுவர்கள் ஊறிப் போயிருந்தது. இந்நிலையில், நேற்று அரக்கோணம் ஆச்சரி தெருவில் உள்ள பழமையான வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்துள்ளது.

அப்போது, வீட்டில் குடியிருந்த 95 வயது மூதாட்டியின் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அவரின் கால் எழும்பு முறிந்துள்ளது. இதனையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், வீடு இடிந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:எம்பி செந்தில்குமார் சர்ச்சை பேச்சு; முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details