தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளைத் தடுக்க தனி கவனம் - எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா! - Ranipet district news

ராணிப்பேட்டை: பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளைத் தடுக்க தனி கவனம் செலுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newly-appointed-ranipet-district-superintendent-of-police-omprakash-meena
newly-appointed-ranipet-district-superintendent-of-police-omprakash-meena

By

Published : Jun 9, 2021, 7:32 AM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக, நாகப்பட்டினத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஓம்பிரகாஷ் மீனா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா நேற்று (ஜுன்.08) பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியதையை ஏற்று கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.குறிப்பாக மாவட்டத்தில் அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் கொலை, குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஓம்பிரகாஷ் மீனா

எனவே, மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீது உள்ள பழைய வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளைத் தடுக்க தனிக் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'ஆன்லைன் வகுப்புகளைப் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும்' - ஐஜி அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details