தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன? - வாலாஜாபேட்டை

ராணிப்பேட்டை அருகே பெற்ற குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Mar 18, 2023, 2:37 PM IST

ராணிப்பேட்டை:வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன் - செளந்தர்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதில் இரு குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செளந்தர்யாவின் உறவினர்கள் சிலர் அவருக்கு உளவியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த செளந்தர்யா இரண்டாவது மகள் மற்றும் ஆண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆற்காடு நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பீகாரில் கர்ப்பிணிச் சிறுமி எரித்துக் கொலை! - கோர சம்பவத்தின் கொடூர பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details