தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்! - சென்னை உயர்நீதிமன்றம்

Minister Ponmudi Verdict :அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Minister Ponmudi Verdict
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 8:15 AM IST

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

ராணிப்பேட்டை:அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று பி.எட்., மற்றும் எம்.எட்., படித்த 400 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ்பாரி கர்நாடகத்தில் விதிகளை மீறி கல்குவாரி நடத்துவதாக அவரது வீட்டில் கர்நாடகா லோக் ஆயுக்தா சோதனை நடத்தும் செய்தி அன்றாடம் வரக்கூடிய செய்தியாக போய்விட்டது. அதையும் சட்டரீதியாக சந்திப்போம்.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் எதிர் கட்சியினரை அடக்கி, ஒடுக்கி, மிரட்டி பார்க்க நினைக்கின்றனர். ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி, நெல்லையில் ரூ.6000 நிவாரணம்; மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

ABOUT THE AUTHOR

...view details