தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடுதல் நகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி - minister rajakannappan

கிராமபுற மக்கள், குறிப்பாக பெண்கள் பயனடையும் வகையில் கூடுதல் நகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பரப்புரை
அமைச்சர் ராஜகண்ணப்பன் பரப்புரை

By

Published : Oct 1, 2021, 9:29 AM IST

ராணிப்பேட்டை:ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று (செப்., 30) வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "கரோனா நோய்த் தொற்று காலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கை வசதிகளை விரைந்து ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்பை தடுத்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அக்டோபர் மாதம் கூடுதலாக 50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், கிராமபுற மக்கள் குறிப்பாக பெண்கள் பயனடையும் வகையில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பரப்புரை

இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:இரு விரல் பரிசோதனை: மகளிர் ஆணையம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details