ராணிப்பேட்டை: அம்மூரை அடுத்த வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல், சந்தியாவின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால், அவர்களது காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.