சென்னையிலிருந்து வேலூர் நோக்கிச் சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, வேலூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளது.
திடீரென சரக்கு லாரி பேருந்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து எதிரே வந்த கார் மீது மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.