தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஸ்கிரீமில் நெளிந்த புழுக்கள்.. ஆற்காடு அதிர்ச்சி சம்பவம்! - Food safety department

ஆற்காட்டில் உள்ள தனியார் கடையில் வாங்கிய ஐஸ்கிரீமில் புழுக்கள் இருந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையினர் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

குளிர் தாங்காமல் ஐஸ்கிரீமில் இருந்து வெளியேறிய புழுக்கள்.. ஆற்காட்டில் அதிர்ச்சி!
குளிர் தாங்காமல் ஐஸ்கிரீமில் இருந்து வெளியேறிய புழுக்கள்.. ஆற்காட்டில் அதிர்ச்சி!

By

Published : Dec 27, 2022, 10:40 AM IST

ஆற்காட்டில் உள்ள தனியார் கடையில் வாங்கிய ஐஸ்கிரீமில் புழுக்கள் இருந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையினர் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்

ராணிப்பேட்டை:ஆற்காடு பேருந்து நிலையம் அருகே தனியார் ஐஸ்கிரீம் பார்லர் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (டிச.26) ராணிப்பேட்டையைச் சேர்ந்த தாவூத் பாஷா என்பவர் தனது மகளுடன் ஐஸ்கிரீம் சாப்பிட வந்துள்ளார். அப்போது இருவரும் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் தூவப்பட்டிருந்த முந்திரி பருப்பில் புழுக்கள் நெளிந்தவாறு இருந்துள்ளது.

மேலும் குளிர்ச்சியை தாங்காமல் ஏராளமான புழுக்கள் ஐஸ்கிரீமில் இருந்து வெளியே வந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாவூத் பாஷா, ஐஸ்கிரீம் பார்லர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், கடையை ஆய்வு செய்தனர்.

அப்போது கடையில் இருந்து சில உணவு மாதிரிகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சேகரித்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details