ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே நந்தியாலம் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கடையின் உள்ளே இருந்த விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை கொண்டு உடனடியாக விசாரணையை துரிதப்படுத்த காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். கொள்ளையடிக்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தளர்வுகளற்ற ஊரடங்கு நேரத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை உடைத்து ப மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் கொள்ளை - etv news
ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு