மதுவை ஒழிக்க 'பாமக 2.O' ஆரம்பம் ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொய்கை நல்லூர் கிராமம் உள்ளது. இங்கு பாமகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் புதிதாக நிர்வாகிகள் நேற்று (டிச. 24) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, நிச்சயமாக இனிவரும் காலம் நம்முடையது. 50 ஆண்டுகால தமிழ்நாட்டில் இருகட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் நம்முடைய வாழ்க்கைமுறை மாறவில்லை. வருகிற வழி எல்லாம் சாராயக்கடை. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் சாராயக்கடை மூடுவதாக தெரியவில்லை.
எத்தனையோ போராட்டங்கள் செய்து விட்டோம். இன்னும் சொல்லப்போனால் அதிகமாக பார்களும் திறந்து விட்டனர். காரணம் அதில் வருகிற வருமானத்தை வைத்துதான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மதுவை ஒழிக்க பாமக 2.O ஆரம்பம் என அவர் தெரிவித்தார்.
இலவச கல்வியை கொடுக்க வேண்டும். இலவச சுகாதாரத்தை கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு நிகராக இலவச சுகாதாரத்தை கொடுக்க வேண்டும். எனவே நல்ல கொள்கைவுடைய கட்சியாக பாமக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திடீரென கோடீஸ்வரர்களான இளைஞர்கள்.. கேரளாவில் நடந்தது என்ன?