ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்ரா மற்றும் மணிமேகலை என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதோடு மணிமேகலை 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளமுள்வாடி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தன்னுடைய குடும்பத்துடன் மகாதேவன் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர்ர் மது போதையில் இறப்பு நடந்த இடத்தில், தாறுமாறாக இருசக்கர வானத்தை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதனை மகாதேவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கமலக்கண்ணனுக்கும் மகாதேவனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். பின்னர் கலகண்ணன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வருவதால் சம்பவம் நடந்த மறுதினமே வேலைக்கு சென்னைக்கு சென்று விடுகிறார். இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உட்பட தொடர் விடுமுறை என்பதால் நேற்று இரவு (அக்.22) சென்னையில் இருந்து கமலக்கண்ணன் வந்துள்ளார்.