ராணிப்பேட்டை:முத்துக்கடை அடுத்த நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிப்பவர் சுலைமான் (40). இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுலைமான் அப்பகுதியிலுள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்துவருகிறார்.
சுலைமானுக்கு அவரது மனைவி மும்தாஜ் மீது சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்தச்சூழலில் இன்று (ஜூலை 20) காலை 10 மணியளவில் சுலைமான் மும்தாஜிடம் சந்தேகத்தின்பேரில் வழக்கமாக தகராறு செய்தபோது ஆத்திரத்தில் திடீரென அருகே இருந்த ’ஷூ லேசால்’ மனைவி கழுத்தை இறுக்கியுள்ளார்.