ராணிப்பேட்டை:ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், 'ஆற்காடு அடுத்த வேப்பூரில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த 8 ஏக்கர் நிலத்தை, வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கியது.
இது தொடர்பான பிரச்சனை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இன்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்பு பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருச்சி அடுத்த திருச்செந்துறையில் கிராமமே வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினர்.
இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஆதித்த கரிகாலன் யார் என்பது தற்போது மக்களுக்கு தெரிவதாகவும், அந்தப் படத்தில் வயதான காலத்தில் சிறிய பெண்ணை கட்டியவரின் பேச்சை ஒருபோதும் கேட்காதே என்ற வசனம் ஈ.வெ.ரா-வை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வேப்பூரில் 8 ஏக்கர் நிலம் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் பட்டா மற்றும் அ - பதிவேடு ஆகியவை விவசாயிகளின் பெயரில் உள்ள நிலையில், முறைகேடாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தை மீட்டு இஸ்லாமியர்களிடம் முறைகேடாக ஒப்படைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர் இதனை செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சிறையிலடைக்க வேண்டும் எனப் பேசினார்.