ராணிப்பேட்டைமாவட்டம், ஆற்காடு ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் பாலமுருகன் அடிகளாரின் மெய்ஞான விழாவிற்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். அவரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின்னர் மெய்ஞான விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜன், சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லக்கூடியவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் என்றார்.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு பூஜை முக்கியமாகச் சீனா போன்ற நாடுகளில் தற்போதும் அதிகளவில் கரோனா தொற்று பரவி வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். உலகத்திலேயே இல்லாத அளவிற்கு 12 லிருந்து14 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் விட்டிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு தடுப்பூசியைச் செலுத்த வேண்டியது நம்முடைய கடமை என்றார்.
அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தமிழிசை எப்போதெல்லாம் மீனவர்கள் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டபோது உடனடியாக எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறார். எப்படி உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதற்கு வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொண்டார்களோ அதேபோல் மீனவ சகோதரர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதற்காகப் பிரதமர்-க்கும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் இதையும் படிங்க: நான் கூறியதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின்