ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். வேலுவின் திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் பட்சத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். கட்சியின் பலத்தை பொறுத்து இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். கூட்டணியில் தேசிய கூட்டணி எனில் அதன் தலைமையும், மாநில கட்சி எனில் அதன் தலைமையும் வெளியிடும் வேட்பாளர் சார்ந்த அறிவிப்பே உறுதியாக இருக்கும்.