ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. அதில் அக்கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் (26), சூர்யா (26) ஆகிய இருவரும் கத்தி, கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாகத் தாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மதன், வல்லரசு, சௌந்தர்ராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களில் மதன் (34), சத்யா (32), மூக்கன் (எ) ராஜசேகர் (28), அஜித் (24), கார்த்திக் (22), புலி (20), சூர்யா (20) ஆகிய ஏழு பேரை கடந்த மே.7-ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.