ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கோணலம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கா புரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் நிலத்திற்கு அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலின் அருகே உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக பாக்கியராஜ் தனது மகன் அருண்குமாருடன் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி வயலில் விழுந்த பாக்கியராஜ் வயலில் அருகே அமைக்கப்பட்டிர்ந்த மின் வேலியில் பட்டு துடித்துள்ளர். இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்பதற்காக முயற்சி செய்யும்போது மின்சாரம் தாக்கி மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.