தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - ராணிப்பேட்டை செய்திகள்

ராணிப்பேட்டையில் தனது மகளைக் கிண்டல் செய்த 2 இளைஞர்களைத் தட்டிக் கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றம் செய்த இளைஞர்களை சிப்காட் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 24, 2023, 5:22 PM IST

ராணிப்பேட்டை:லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், சுந்தரேசன் (42). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் லில்லி (20), அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

உடல் நலக்குறைவால் லில்லியின் கணவன் சரத்குமார் உயிரிழந்து விடவே, கைக்குழந்தையுடன் லில்லி தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்ட சுந்தரேசன், 2ஆவது மகள் நதியாவுடன் மூத்த மகள் லில்லியையும் வாலாஜா அரசினர் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமாரின் நண்பர்களான அஜித் (22), சரண் (22) ஆகியோர் கல்லூரி மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதே போல் பலநாட்களாக தொடர்ந்து கிண்டல் செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தந்தை சுந்தரேசனுக்கு தெரியவந்தது.

அஜித் மற்றும் சரண் ஆகியோர் லாலாப்பேட்டை கூரோட்டில் இருப்பதைப் பார்த்த தந்தை சுந்தரேசன், இரு இளைஞர்களையும் தட்டி கேட்டுள்ளார். அப்போது தனது நண்பனின் மறைவுக்கு, உனது மகள் தான் காரணம் என கூறி இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரத்தில் இரு இளைஞர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனை தலை, கழுத்து, முதுகு, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குத்தியும், கைகளாலும் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுந்தரேசனை கத்தியால் குத்திய அஜித், சரண் ஆகியோர் அங்கிருந்து, தப்பி ஓடி தலை மறைவாகினர்.

உயிரிழந்த சுந்தரேசன்

வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக சுந்தரேசனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அஜித் மற்றும் சரண் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:Hogenakkal: ஒகேனக்கல்லில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details